ETV Bharat / state

11ஆம் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய முதலமைச்சர்!

author img

By

Published : Dec 10, 2020, 12:26 PM IST

சென்னை: 2020-21 ஆம் கல்வி ஆண்டு 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கே. பழனிசாமி தொடங்கிவைத்தார்.

cm palanisamy
cm palanisamy

11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 214 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி , தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கடந்த 2001-02ஆம் கல்வியாண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

பின்னர் 2005-06ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய முதலமைச்சர்

அந்த வகையில் இந்த ஆண்டு, 2 லட்சத்து 38 ஆயிரத்து 456 மாணவர்கள், 3 லட்சத்து 6 ஆயிரத்து 710 மாணவிகளுக்கு என மொத்தம் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.