ETV Bharat / state

'வாத்தி ரெய்டு... வாத்தி ரெய்டு' - அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு - அம்பத்தூர் காவல் நிலையத்தை முதலமைச்சர் திடீர் ஆய்வு

அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அம்பத்தூர் காவல் நிலையத்தை முதலமைச்சர் திடீர் ஆய்வு

author img

By

Published : Apr 15, 2022, 5:44 PM IST

சென்னை: அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நரிக்குறவர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களது இல்லத்தில் உணவு அருந்த முதலமைச்சர் இன்று(ஏப்.15) திருவள்ளூர் மாவட்டம், ஆவடி - நரிக்குறவர் காலனி பகுதிக்கு வந்தார்.

அம்பத்தூர் காவல் நிலையத்தை முதலமைச்சர் திடீர் ஆய்வு

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர், செல்லும் வழியில் சி.டி.ஹெச் சாலையில் அமைந்துள்ள அம்பத்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக காவல் நிலையத்தை பார்வையிடலாம் என காவல் ஆய்வாளரிடம் கேட்ட முதலமைச்சர், காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அறையில் அமர்ந்து, காவலர்கள் வாரவிடுப்பு பதிவேடு மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவேட்டை ஆய்வு செய்தார்.

மகப்பேறு விடுப்பில் சென்றுள்ள பெண் காவலர் புவனேஸ்வரியின் விடுப்பு தொடர்பான விவரங்களை உதவி பெண் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார். அதேபோல், காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள், கைதிகளின் அறை உள்ளிட்டவையை ஆய்வு செய்தார். பின்னர் காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின்போது பல்வேறு காவலர்கள் உடன் இருந்தனர். முதலமைச்சரின் திடீர் ஆய்வால் காவலர்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதையும் படிங்க: நரிக்குறவர் வீட்டில் டிபன் முடித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.