ETV Bharat / state

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஆய்வு - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஆய்வு
முதலமைச்சர் ஆய்வு
author img

By

Published : Jan 17, 2022, 4:40 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கருணாநிதி மேற்கொண்ட பெரும் முயற்சியால் உலகின் மூத்த மொழியாம் சொல் வளமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழி 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற கலைஞரின் கனவினை நிறைவேற்ற ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் செம்மொழிக்கான நிறுவனமொன்று நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் அமைக்கப்பட்டது.

இலக்கணம் குறித்த ஆய்வு

பின்னர் 2008 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப்பெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது.

தொல்பழங்காலம் முதல் கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித் தன்மையையும், அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறுவனம் கொண்டுள்ளது. கருணாநிதியால் 2007 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செம்மொழி நிறுவனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டடம்

அந்நிலத்தில் ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டடம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவரான முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிரதமரால் 12.1.2022 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடம் தரைத்தளத்துடன் மொத்தம் நான்கு தளங்களைக் கொண்டுள்ளது.

தரைத் தளத்தில் 45,000-க்கும் மேற்பட்ட தொன்மையான நூல்களைக் கொண்ட நூலகமும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம் என இரண்டு கருத்தரங்க அறைகளும் உள்ளன. முதல் தளத்தில் கல்விசார் பணியாளர்களுக்கான அறைகள், அலுவலகம், இயக்குநர், பதிவாளர் மற்றும் நிதி அலுவலர் ஆகியோருக்கான அறைகள் உள்ளன.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

இரண்டாம் தளத்தில் மின்நூலகம், காட்சி வழி கற்பித்தல் அரங்கு, வலையொளி அரங்கு முதலானவையும் உள்ளன. மூன்றாம் தளத்தில் வருகைதரு பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் விதமாக அமைக்கப்பட உள்ளது.

இத்தகைய சிறப்பான கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நூலகத்திலுள்ள பழமையான நூல்கள் குறித்தும், செவ்வியல் நூல்களின் மின்படியாக்கம் குறித்தும் ஆவலோடு கேட்டறிந்தார்.

மேலும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம், கல்விசார் பணியாளர்கள், நிருவாகப் பிரிவு அலுவலகங்களைப் பார்வையிட்டார்.

எதிர்காலத் திட்டம்

அதனைத் தொடர்ந்து, செம்மொழி நிறுவன ஆய்வுசார் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நிறுவன இயக்குநர் காட்சி வழி மூலம் நிறுவனத்தின் செயற்பாடுகளை விளக்கினார். அதில் இந்நிறுவனத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், தற்போது செய்து கொண்டிருக்கும் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.

பின்னர் முதலமைச்சர் இந்நிறுவனம் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்தும் அறிவுறுத்தினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.