ETV Bharat / state

கர்நாடக மாநில வனத்துறையினருக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்! - சென்னம்பட்டி வனப்பகுதி

கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 17, 2023, 10:41 PM IST

சென்னை: கர்நாடக மாநில வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி ஐந்து லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜா என்ற காரவடையான் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜா என்ற காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கவைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Video Leak - சைவக்கடையில் சிக்கன் ரைஸ் கேட்டு போதையில் தகராறு செய்த காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.