சென்னை: நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய காணொலி வைரலான நிலையில், நேற்று(மார்ச் 17) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அவர்களது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று(மார்ச் 17) காலை திடீரென ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு பால்வளத்துறை அமைச்சர் SM.நாசர் மற்றும் ஆவடி மேயர் G.உதயகுமார், துணை மேயர் S.சூரியகுமார் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது முதலமைச்சரை சந்தித்த 3 குழந்தைகள் உள்ளிட்ட நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் 40 குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களின் கல்வி பயில்வது குறித்துப் பேசினர்.
உங்கள் வீட்டில் எனக்கு சோறு போடுவீங்களா..?
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் நாசர் நரிக்குறவர் காலணிக்குள் சென்று குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது காணொளி வாயிலாக நரிக்குறவர் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் முதலமைச்சர் பேசினார். அப்போது இன்னும் ஒரு வாரத்தில் ஆவடி நரிக்குறவர் காலணிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்தார். மேலும், “நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு கொடுப்பீர்களா..?” என்று கேட்டார். அதற்கு நரிக்குறவர்கள் முதலமைச்சருக்கு கறி சோறு போடுவதாக சந்தோஷமாக கூறினார்கள். குழந்தைகள், தங்களுக்கு ST சான்றிதழ் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
மேலும், இந்தப் பகுதியில் இருந்து தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு உயர் கல்வி பயில்வதற்கு மத்திய அரசு நிறுவனமான கேந்திரிய பள்ளிகள் குழுமத்தில் அவர்களை அனுமதிப்பது குறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் அவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதையும் படிங்க:'தோழி' ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் - தனுஷ் ட்வீட்!