தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாகத் திருவாரூர் சென்றுள்ளார். திருவாரூர் உள்ள கலைஞர் இல்லத்திற்குச் சென்ற அவர் அங்கு மக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மாலையில் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்குச் சென்றார். பின்னர் காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மணிமண்டப பணிகளைப் பார்வையிட்டார்.
நாளை காலை மன்னார்குடியில் நடைபெறும் கட்சி பிரமுகர் இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்ள உள்ள அவர் இரவு திருவாரூரில் சன்னதி தெருவில் தங்குகிறார். முன்னதாக திருவாரூர் கமலாலயம் குளத்திற்குச் சென்ற அவர் அதன் கரைகளில் அமர்ந்து பல நினைவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். (1/2) pic.twitter.com/GR7ZE7LEKA
— M.K.Stalin (@mkstalin) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். (1/2) pic.twitter.com/GR7ZE7LEKA
— M.K.Stalin (@mkstalin) February 21, 2023கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். (1/2) pic.twitter.com/GR7ZE7LEKA
— M.K.Stalin (@mkstalin) February 21, 2023
ட்விட்டரில் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்!” என்று பதிவிட்டுள்ளார்.