ETV Bharat / state

ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 25) திறந்து வைத்தார்.

வேலூர் சிஎம்சி இராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

author img

By

Published : Jun 25, 2022, 5:08 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 25) ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மொத்த மின்சார விநியோகத்தில் 30 சதவிகித தேவையினை பூர்த்தி செய்யும் சோலார் பேனல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதோடு 1,500 படுக்கை வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை மையம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 பிரத்யேக அறுவை சிகிச்சை அறைகள், கூடுதலாக 29 அறுவை சிகிச்சை அறைகள், 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சை மற்றும் ஆய்வகங்கள் உள்ளன.

வேலூர் சிஎம்சி இராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

மேலும், 29 படுக்கை வசதிகளுடன் கூடிய எலும்பு - மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவு, முழுவசதி கொண்ட இரத்த சேமிப்பு மற்றும் இரத்த நன்கொடையாளர் மையம், 50 டயாலிசிஸ் படுக்கை வசதிகள், உயர்நிலை நோய் கண்டறியும் சிகிச்சைக்கான கதிரியக்கவியல் மற்றும் அதிநவீன ஆய்வகங்கள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், சி.எம்.சி. இயக்குநர் டாக்டர் ஜெ.வி. பீட்டர், இணை இயக்குநர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் ஆகியோர் இருந்தனர். அதேபோல், இராணிப்பேட்டையிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன், சி.எம்.சி. தலைவர் பார்கஸ் வார்ஜி, இணை இயக்குநர் ஜாய் ஜான் மேமன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இருந்தனர்.

இதையும் படிங்க: இனி, அதிமுகவில் ஒற்றை தலைமை தான் - ஜெயக்குமார் திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.