ETV Bharat / state

கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட கேலரியைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

139 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

author img

By

Published : Mar 17, 2023, 10:57 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனுடன் 139 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைத்தார்.

பெவிலியனை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
கேலரியைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

1916ஆம் ஆண்டு கட்டப்பட்ட சேப்பாக்கம் மைதானம் இந்தியாவின் இரண்டாவது பழமையான மைதானமாகத் திகழ்கிறது. 1934ஆம் ஆண்டு முதல்முறையாக சர்வதேச அளவிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின.

இதனைத்தொடர்ந்து உள்ளூர் முதல் சர்வதேச அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கேலரிகளை புதுப்பிக்கத் திட்டமிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சுமார் 139 கோடி ரூபாய் செலவில் புதிய கேலரியை ஒரே வருடத்தில் கட்டி முடித்துள்ளது.

ஏற்கெனவே உள்ள 31 ஆயிரத்து 140 இருக்கைகளுடன் புதிதாக 5 ஆயிரத்து 306 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 36 ஆயிரத்து 446 இருக்கைகளுடன் சேப்பாக்கம் புத்துயிர் பெற்றுள்ளது. மேலும், 655 நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடமும், 655 இருசக்கர வாகனம் நிறுத்துமிடமும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன் மைதானத்திற்குள் பார்க்கிங் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பெவிலியனில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியில் சர்வதேச தரத்தில் வீரர்களுக்கான ட்ரெசிங் ரூம் எனப்படும் ஓய்வறை மற்றும் மிக முக்கிய நபர்கள் அமர்ந்து பார்க்கும் சிறப்பு இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேப்பாக்கம் மைதானத்தில் அமைந்துள்ள கேலரிக்கு முதல்முறையாக மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் இருக்கைகளை கொண்ட ஐ.ஜே.கே கேலரியும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. வரும் 22ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு சேப்பாக்கம் மைதானம் புதுப்பொலிவுடன் ஜொலிக்க காத்திருக்கிறது.

கேலரியைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலினின் குழு புகைப்படம்

அத்துடன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் களைகட்ட காத்திருக்கிறது. திறக்கப்பட்ட இந்த கேலரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியா சிமென்ட் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் சுற்றிப் பார்த்து முழு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சிவி. கணேசன், செஞ்சி மஸ்தான், சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ''இது கம்யூனிகேசன் பிரச்னை''.. அமைச்சர் கே.என்.நேரு - எம்.பி. திருச்சி சிவா சந்திப்பும் பின்னணியும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.