சென்னை: கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம். 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனையடுத்து பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டபாதையில் பல்வேறு அடுக்குகளாக நிலைநிறுத்தப்பட்ட சந்திராயன் 3 விண்கலம், நிலவை நோக்கி சுற்றத் தொடங்கியது.
மேலும், திட்டமிடப்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரை இறங்கி நிலவின் பரப்பைத் தொட்டு உள்ளது. சந்திராயன் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய வரலாற்று நிகழ்விற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக மாநாடு ஒரு புளியோதரை மாநாடு - ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ விமர்சனம்
சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர்களின் மிக முக்கியமானவர் ஒரு தமிழர். சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரர் முத்துவேல், நிலவின் தென் துருவத்தில் இந்தியா ஆய்வு மேற்கொள்ளும் இஸ்ரோ திட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானவராக கருதப்படுகிறார்.
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி, அதன் ரோவரையும் தரையிறக்கிய நிலையில், அதன் திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு தொடர் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சந்திராயன் 3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீர முத்துவேலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்!#Veeramuthuvel #Chandrayaan3#Ch3 pic.twitter.com/B87pQ4WQxM
— M.K.Stalin (@mkstalin) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்!#Veeramuthuvel #Chandrayaan3#Ch3 pic.twitter.com/B87pQ4WQxM
— M.K.Stalin (@mkstalin) August 23, 2023'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்!#Veeramuthuvel #Chandrayaan3#Ch3 pic.twitter.com/B87pQ4WQxM
— M.K.Stalin (@mkstalin) August 23, 2023
அப்போது பேசிய முதலமைச்சர் "தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே உலக அளவில் பெருமை தேடி தந்துள்ளீர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தந்தை அளித்த பேட்டியை பார்த்தேன், முகவும் பெருமைபட்டு உள்ளார். அங்கு இஸ்ரோவில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழ்நாட்டிற்கு நீங்கள் வரும் போது சொல்லுங்கள் கட்டாயமாக சந்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு வீரமுத்துவேல் விஞ்ஞானி நன்றியை தெரிவித்து உள்ளார். தங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் கூறியது மகிழ்ச்சி என்றும், உங்கள் சேவை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று விஞ்ஞானி வீர முத்துவேல் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: Chandrayaan-3: நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த சந்திராயன்-3.. திரைப்பிரபலங்களின் வாழ்த்து மழை!