இந்தியத் திரையுலகின் பிரமாண்ட இயக்குநராக வலம் வரும் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், ரோஹித் தாமோதரனுக்கும் இன்று (ஜூன் 27) காலை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வெல்கம் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

கரோனா பாதுகாப்புக் கருதி மணமக்களின் பெற்றோர் மற்றும் அவர்களின் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர்:
இந்த திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், கரோனா தொற்று படிப்படியாக குறைந்து, அன்றாட வாழ்வு நிலை திரும்பியவுடன் முக்கியப் பிரமுகர்கள், திரையுலகத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் பயோபிக்கில் யார் நடிக்கணும்: விருப்பத்தை வெளிப்படுத்திய 'சின்னதல'