ETV Bharat / state

கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகத் தடுப்பூசிகளை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

author img

By

Published : Apr 27, 2021, 8:28 AM IST

தமிழ்நாட்டில் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மே 1ஆம் தேதிமுதல் 18 - 45 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் மே 1ஆம் தேதிமுதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை மொத்தமாக வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசிகளின் விலையைக் குறைக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளை வல்லுநர்கள் மூலம் ஆராய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பரவல்: தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பிரதமருடன் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.