ETV Bharat / state

நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு - Noyyal Athupalayam reservoir

சென்னை: நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசன வசதிக்காக,தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

CM
CM
author img

By

Published : Oct 8, 2020, 7:02 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் நொய்யல் கால்வாய் பாசன விவசாயிகள் கால்நடை தேவைகளுக்காகவும் நிலத்தடி நீர் உயரவும் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிட கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் இருப்பை கணக்கில்கொண்டு, கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் நொய்யல் கால்வாயிலுள்ள 19403.70 ஏக்கர் பாசன பகுதிகளுக்கும், கால்நடை தேவைகளுக்காகவும், நிலத்தடி நீர் உயரவும் சிறப்பு நனைப்பிற்காக, நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து 9.10.2020 முதல் 28.10.2020 வரை உள்ள காலத்தில் முறைவைத்து 20 நாள்களுக்கு மிகாமல் 224.64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

வேளாண் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.