ETV Bharat / state

குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட படைப்பிரிவினருக்கு கேடயங்கள் வழங்கிய ஸ்டாலின் - முக ஸ்டாலின்

குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட படைப்பிரிவினருக்கும், அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார்.

குடியரசு தின விழாவில் சிறப்பாக செயல்பட்டவருக்கு கேடயம்

author img

By

Published : Feb 11, 2023, 2:02 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை சார்பில் இவ்வாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட படைப்பிரிவினர்களில், சிறப்பாக செயல்பட்ட ராணுவப்படைப் பிரிவு, மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப் பிரிவு, தேசிய மாணவர் படைப் பிரிவு (ஆண்கள்), சிற்பி பெண்கள் படைப் பிரிவு ஆகிய படைப்பிரிவிற்கு மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.

குடியரசு தின விழா ஒவ்வொரு வருடமும் மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள், தென்னக பண்பாட்டு மையம், செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகியவற்றின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதே போல இவ்வாண்டு முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளும் படைப்பிரிவினர்களுள் சிறப்பாக செயல்படும் படைப்பிரிவினர்களுக்கு பரிசுகள் வழங்கிட முதலமைச்சரால் முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவ்வாண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பாக செயல்பட்ட இராணுவப்படைப் பிரிவின் சார்பில் தலைவர் கேப்டன் யாஷ் தாதல், மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவின் சார்பில் உதவி கமாண்டன்ட் மனோஜ் கேஆர் பான்டே, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப் பிரிவின் சார்பில் ஆய்வாளர் வி.சுரேஷ்குமார் ஆகியாருக்கு வழங்கப்பட்டது.

மேலும் தேசிய மாணவர் படையின் (ஆண்கள்) சார்பில் தலைவர் என்.திலிப் மற்றும் சிற்பி பெண்கள் படைப் பிரிவின் சார்பில் தலைவர் எஸ்.மதினா, குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் மஞ்சு பாண்டே மற்றும் குரூப் கேப்டன் முகேஷ் பரத்வாஜ் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வின் போது சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், துணைச் செயலாளர் (மரபு) மரு. எஸ்.அனு ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.