ETV Bharat / state

நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்! - Chief Minister Stalin

பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
author img

By

Published : Nov 4, 2021, 5:47 PM IST

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணையையும் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், 81 நபர்களுக்கு ரூ. 3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்கள், 6 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள், 88 நபர்களுக்கு இருளர் சாதிச் சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

'முத்ரா' திட்டத்தின்கீழ் 12 நபர்களுக்குத் தலா ரூ.1 லட்சம் வீதம் கடனுதவி, புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குக் கூடுதலாக இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை என ரூ.4.53 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (நவ.4) முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் நரிக்குறவர், இருளர் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி, முதலமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'அண்ணாத்த' திரையிடப்பட்ட தியேட்டரில் பரபரப்பு - ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.