ETV Bharat / state

புதுக்கோட்டையில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு - வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் வரும் 22ஆம் தேதி  புதுக்கோட்டையில் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்.

Chief Minister inspect
Chief Minister inspect
author img

By

Published : Oct 20, 2020, 12:28 AM IST

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டந்தோறும் சென்று முதலமைச்சர் ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த 13ஆம் தேதி தூத்துக்குடி, 14ஆம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் திடீர் மறைவு காரணமாக இந்த பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. அவரின் இறுதி அஞ்சலி மற்றும் காரிய நிகழ்வுகள் முடித்துக்கொண்டு முதலமைச்சர் நேற்று சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில், 22ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலும், அக்டோபர் 29ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு நடத்தவுள்ளார். கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை செய்யவுள்ளார்‌. பின்னர் மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழிற்துறையினரைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிகிறார்.

அதனைத்தொடர்ந்து, 29ஆம் தேதி இரவு மதுரையில் தங்கி, அடுத்த நாள் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.

இதையும் படிங்க: மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.