ETV Bharat / state

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த ’வானவில் மன்றம்’ - தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த ’வானவில் மன்றம்’

author img

By

Published : Nov 27, 2022, 9:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆர்வத்தை மேம்படுத்த வானவில் மன்றம் என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் நாளை(நவம்பர் 28) முதல் பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்புடைய அறிவியல், கணித பரிசோதனைகளை செய்வதற்கு ஏதுவாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) கருத்தாளர்கள் ஆகியோர் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர்.

அரசு பள்ளிகளில் இந்த திட்டம் புதுமையான முயற்சியாக மேற்காெள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த வானவில் மன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சியில் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் நாளை மாலையில் திட்டம் தொடங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலவச மகளிர் பேருந்து திட்டம் மூலம் மாதம் 1012 ரூபாய் வரை சேமிக்கும் பெண்கள்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.