தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவ மழை முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ளன. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின்போது வடகடலோர மாவட்டங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டதால், சென்னையும் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன. 2016ஆம் ஆண்டு வீசிய வர்தா புயலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலத்திலேயே சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்