ETV Bharat / state

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டம்: முதலமைச்சர் தொடங்கிவைப்பு - சென்னை செய்திகள்

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1361.75 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (பிப். 4) தொடங்கிவைத்தார்.

Chief Minister has launched a scheme to provide bank credit links to women's self help groups

author img

By

Published : Feb 5, 2021, 8:00 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 20 ஆயிரத்து 186 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1083.96 கோடி ரூபாய் மற்றும் 317 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 277.79 கோடி ரூபாய் என மொத்தம் 1361.75 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கும் அடையாளமாக, 7 மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெறவும், வங்கிகளுடன் வலுவான நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு வருமானம் ஈட்டக்கூடிய பொருளாதார தொழில்கள் தொடங்கி நடத்திடவும், அதிக அளவு கடன்கள் தொடர்ச்சியாகப் பெறவும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டம் வழிவகை செய்கிறது.

இதன்மூலம் பெண்களின் பொருளாதார ஆற்றல் மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 19.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், "2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு , 2020-21ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

ஆனால், அந்த இலக்கினையும் கடந்து இதுவரையில் 15,653.04 கோடி ரூபாய் வங்கிக்கடன் தொகை மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 121 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகையினைவிட அதிகமானதாகும். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 48,737.40 கோடி ரூபாய் கடனுதவியாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் 2011ஆம் ஆண்டுமுதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 81,582.65 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜோதி நிர்மலாசாமி, செயல் இயக்குநர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: போதையிலிருந்து மீள வா என்றழைத்து இளைஞரை சடலமாக அனுப்பிய சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.