நிவர் புயல், கனமழை காரணமாக சென்னைவாசிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் காவல், தீயணைப்புத் துறையினர் புயல், மழைநீரில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் மழைநீரில் சிக்கித் தவித்த பொதுமக்களை காவல் துறையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் முன்னதாக ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், மகேஷ் அகர்வாலின் இந்த ட்வீட்க்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நெகிழ்ச்சி அளிக்கிறது! ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். காவல் துறை உங்கள் நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள சென்னை காவல் துறை நிர்வாகத்திற்கும் காவலர்களுக்கும் எனது உளம் கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'மன வலிமையோடு கரோனாவை வெல்வோம்' - முதலமைச்சர் பழனிசாமி