ETV Bharat / state

'மகளிர் தின வாழ்த்துகள்' கூறிய முதலமைச்சர் பழனிசாமி! - Chief Minister Edappadi Palanisamy

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்துகளை செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண்கள் தின வாழ்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண்கள் தினம் Chief Minister Edappadi Palanisamy wishes the women's day Chief Minister Edappadi Palanisamy women's day
Chief Minister Edappadi Palanisamy wishes the women's day
author img

By

Published : Mar 7, 2020, 7:07 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெண்களின் சிறப்பு, மாண்பைப் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் அனைத்து மகளிருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும், நல்வாழ்விற்காகவும் தமிழ்நாடு அரசு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்பட விலையில்லா ஆடு மாடுகள், திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் நீக்கிட 13 அம்சத் திட்டங்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒன்பது மாத காலம் மகப்பேறு விடுப்பு, உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் 'அம்மா இருசக்கர வாகனம்', வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பான வசிப்பிடத்தில் தங்கிடவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பெண்கள் வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் கற்களை படிக் கற்களாக மாற்றி, சாதனைப் படைக்கும் பெண்களாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:நித்தியானந்தா முன்னாள் சீடர் தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.