ETV Bharat / state

அண்ணாவின் 51ஆவது நினைவுதினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை - 51st Anniversary of Anna

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை
அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை
author img

By

Published : Feb 3, 2020, 1:00 PM IST

பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுகவின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலரும் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை

முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியிருந்தனர்.

இதையும் படிங்க: அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் - மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம்

Intro:Body:
மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ, தங்கமணி, உதயகுமார், ஜெயக்குமார், துரைக்கண்ணு ராஜலட்சுமி வளர்மதி நிலோபர் கபில், முன்னாள் எம் பி ஜெயவர்தன், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், வாலாஜாபாத் கணேசன் முன்னாள் இன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சமபந்தி விருந்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

தமிழக முதலமைச்சர் கே.கே.நகரில் அமைந்துள்ள விநாயகர் கோவிலிலும், துணை முதலமைச்சர் திருவான்மியூரில் அமைந்துள்ள மருதீஸ்வரர் கோவிலிலும் சமபந்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளனர். அதனைத் தொடர்ந்து சென்னையின் மற்ற பகுதிகளில் உள்ள கோவில்களில் அமைச்சர்களும் சமபந்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

அண்ணா நினைவு தினம் என்பதால் மேலும் பல்வேறு கட்சியை சார்ந்தவர்களும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.