ETV Bharat / state

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

eps
eps
author img

By

Published : Jan 26, 2020, 7:27 PM IST

இதுகுறித்து முதலமைச்சர், ' தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினைப் பெறும் வேணு சீனிவாசன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

பத்மஸ்ரீ விருதினைப் பெறும் லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், எஸ். ராமகிருஷ்ணன், காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

மேலும் அவர், 'விருது பெற்றவர்கள் மென்மேலும் பல விருதுகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்பது தனது விருப்பம்' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேரி கோமிற்கு பத்ம விபூஷன், பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு...

Intro:Body:பத்ம விருதுகள் பெற்றவர் களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர்
மற்றும் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன் அவர்களின் சிறந்த தொழில்
மற்றும் வர்த்தக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு
அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவித்த செய்தியை அறிந்து
நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
அதே போன்று, திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின்
சிறந்த சமூக சேவையினை அங்கீகரித்து அவருக்கும் மத்திய அரசு உயரிய
விருதான பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது என்ற செய்தியை அறிந்து நான்
மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
கலைத்துறையில் சிறந்து விளங்கும் கர்நாடக இசைப் பாடகர்கள்
திருமதி லலிதா மற்றும் திருமதி சரோஜா சிதம்பரம் ஆகியோருக்கு மத்திய
அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, சென்னை ஆகிய பெரும் நகரங்களின் வரலாற்று, சமூக
மற்றும் கலாச்சார அடையாளங்களின் ஓவியங்களை சிறப்புற தீட்டும்
மனோகர் தேவதாஸ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக சேவகர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சமூக
சேவையினை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது நாதஸ்வர இசையால் அனைவரின் உள்ளங்களை கவர்ந்து
வரும் திருமதி காலீ ஷாபி மெகபூப் மற்றும் ஷேக் மெகபூப் சுபானி
ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் பிரதீப் தலப்பில் அவர்கள், விஞ்ஞானம் மற்றும்
பொறியியல் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அவருக்கு பத்மஸ்ரீ
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம
பூஷன் விருதினை பெறும் வேணு சீனிவாசன் மற்றும்
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்; பத்மஸ்ரீ விருதினை பெறும்
திருமதி லலிதா மற்றும் திருமதி சரோஜா சிதம்பரம்,
மனோகர் தேவதாஸ், திரு. எஸ். ராமகிருஷ்ணன், திருமதி காலீ ஷாபி
மெகபூப், திரு.ஷேக் மெகபூப் சுபானி மற்றும் திரு. பிரதீப் தலப்பில்
ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும்
வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு,
அவர்கள் மேன்மேலும் பல விருதுகளை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை
சேர்த்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.