ETV Bharat / state

பிராணாப் முகர்ஜி மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்! - முன்னாள் குடியரசுத் தலைவர் மரணம்

சென்னை: முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவிற்கு பேரிழப்பு என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm palanisamy
cm palanisamy
author img

By

Published : Aug 31, 2020, 8:28 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (31.8.2020) காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர். ஜெயலலிதா ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு சட்டப்பேரவை வைரவிழா, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல விழாக்களில் ஜெயலலிதாவுடன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தவர்.

இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர், சிறந்த பேச்சாளராகவும் விளங்கியவர். சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். இந்திய அரசின் உயரிய பாரத ரத்னா மற்றும் பத்ம விபூசண் விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.