முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு:
1. ரூ.120 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு
புற்று நோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேன்மை மிகு மையம் ஒன்று அமைக்கப்படும்.
2. ரூ.105 கோடி மதிப்பீட்டில் மாநிலத்தில் உள்ள கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்களாக மாற்றப்படும்.
3. ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.67.76 கோடி செலவில் பல்நோக்கு சிறப்பு
மருத்துவமனையாக (Super Speciality Hospital) மேம்படுத்தப்படும்.
4. விபத்துகளில் தலைக்காயம் அடையும் நபர்களை காப்பாற்றுவதற்காக மாவட்டந்தோறும் பல்வகை சிகிச்சை அளிப்பதற்காக
உலகத் தரம் வாய்ந்த ஒரு தீவிர சிகிச்சை மையம் (Multi Disciplinary Critical Care Unit) ரூ.49.01 கோடி செலவில் அமைக்கப்படும்.
5. விபத்திற்கு பின் சிகிச்சை பெறும் நோயாளிகள், நாள்பட்டநோயாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை அளிப்பதற்காக சென்னை
கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் அதிநவீன மறுவாழ்வு மையம் ரூ.40 கோடியில் ஏற்படுத்தப்படும்.
6. புற்று நோய் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம், அரசு மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்தாண்டு ரூ.16 கோடி மதிப்பீட்டில் லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி வாங்கப்படும்.
7. தற்கொலைகளால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.6.72 கோடியில் கட்டணமில்லா ‘104’ தொலைபேசி சேவை வழியாக ஆலோசனை வழங்கும் மையம் அமைக்கப்படும்.
8. சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, ஒரு புதிய சுகாதார மாவட்டம் ஏற்படுத்தப்படும்.
9. காச நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 5 நகர்ப்புற சுகாதார மையங்களில் சோதனை முறையில் 28 வகையான மருந்துகள் வழங்கும் 32 தானியங்கி இயந்திரங்கள் (Automatic Drug Vending Machine) ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
10. அரசு மருத்துவமனைகளின் சேவையை மேலும் மேம்படுத்தும் விதத்தில், ஒரு புதிய முயற்சியாக, ஆர்வமுள்ள தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்புடன் “எனது மருத்துவமனை எனது பெருமை” (My Hospital My pride) என்ற பெயரில் அரசு மருத்துவமனைகள் புதுப்பொலிவுடன் செயல்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.