ETV Bharat / state

விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்! - முதலமைச்சர் இரங்கல்

சென்னை: பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த 24 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Oct 24, 2020, 1:15 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம், சோலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மரம் விழுந்ததில் உயிரிழந்தார், சென்னை மாவட்டம், எர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கடலில் குளிக்கும் போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்,

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், அன்னூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன், ரகுராம், பிரேனஷ் ஆகிய மூன்று பேரும் பவானி ஆற்றின் நீர்த்தேக்கப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.