ETV Bharat / state

சி.நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்கி கௌரவிக்கும் அரசு - குடியரசு தினவிழா விருது அறிவிப்பு

சென்னை: சி.நாராயணசாமி நாயுடு நமது விவசாயிகளுக்கு, ஆற்றிய சிறந்த சேவையை போற்றிப் பாராட்டும் வகையில், குடியரசு தினவிழாவில், இந்த ஆண்டு முதல் ' சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது ' என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Chief Minister announces C. Narayanasamy Naidu Paddy Productivity Award

author img

By

Published : Dec 21, 2020, 2:36 PM IST

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு தனது பேச்சு, செயல் மற்றும் தலைமைப் பண்புகளால் தமிழ்நாடு விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். 1973ஆம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் விவசாய மாநாடுகளை நடத்தி விவசாயிகளின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.

தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காக பாடுபட்ட அவர், விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்தபோதுதான் உயிரிழந்தார். அவரது நினைவு நாளான இன்று ( 21.12.2020 ) அவரைப் போற்றுவதில், நாம் எல்லாம் பெருமை அடைகிறோம்.

சி.நாராயணசாமி நாயுடு நமது விவசாயிகளுக்கு, ஆற்றிய சிறந்த சேவையை போற்றிப் பாராட்டும் வகையில், குடியரசு தின விழாவில் , திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து , அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு முதல் ' சி . நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது ' என்ற பெயரில் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடப்பாண்டில் நாட்டின் நெல் கொள்முதல் 21% உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.