ETV Bharat / state

வேலை வாய்ப்பு பற்றாக்குறை பாஜகவினால் ஏற்பட்டுள்ளது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு - election 2019

சென்னை: 45 ஆண்டுகள் இல்லாத வேலை வாய்ப்பு பற்றாக்குறை, பாஜகவினால் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

pa chidambaram
author img

By

Published : Apr 9, 2019, 2:57 PM IST

தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,

"ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் உருவாக்கமே ஜெயலலிதா மறைந்த பிறகுதான். இதன் முடிவு ஏப்ரல் 18-க்கு பின் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்துத்துவா வேறு, இந்து மதம் வேறு. நாம் அனைவரும் இந்துக்கள்தான். ஆனால் இந்துத்துவா என்று போனால் நாம் வர்ணாசிரமம், வர்ணத்திற்குள் வந்துவிடுவோம்.

காந்தியை கொன்ற கோட்சே இருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குழந்தைதான் பாஜக.

ப.சிதம்பரம்

45 ஆண்டுகளாக இல்லாத வேலை வாய்ப்பு பற்றாக்குறை பாஜகவினால் ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்புதான் காங்கிரசின் முதல் அத்தியாயம். மத்திய அரசில் நான்கு லட்சம், மாநிலத்தில் இருபது லட்சம் வேலை காலியாக உள்ளது. இதனை ஒன்பது மாதங்களில் நாங்கள் நிரப்புவோம். இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தேவை. மொத்த உற்பத்தியில் மூன்று விழுக்காடு மருத்துவத்துறைக்கு ஒதுக்குவோம். கிறிஸ்து பிறந்ததிலிருந்து 900 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி தமிழ் என நிரூபிக்கப்பட்டுள்ளது. கல்விக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற நிலையை காங்கிரஸ் உருவாக்கியது. இந்த ஐந்து ஆண்டுகளில் யாருக்கும் கல்விக்கடன் கிடைக்கவில்லை என்றார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 08.04.19

45 ஆண்டுகளாக இல்லாத வேலை வாய்ப்பு பற்றாக்குறை பாஜவினால் ஏற்பட்டுள்ளது; பா.சிதம்பரம் பேச்சு..

தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழ்ச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து பா.சிதம்பரம் பேச்சு;
இ.பி.எஸ் ஒ.பி.எஸ் ஆகியோரின் உருவாக்கம் ஜெயலலிதா இறந்தநாள், முடிவு ஏப்ரல் 18 டிற்கு பின் சில நாட்கள் தான்.. 
இந்துத்துவா வேறு இந்து மதம் வேறு நாம் அனைவரும் இந்துக்கள் தான்.. ஆனால் இந்துத்துவா என்று போனால் நாம் வர்ணாசிரம வர்ணத்திற்குள் வந்து விடுவோம். காந்தியை கொன்ற கோட்சே இருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குழந்தை தான் பாஜக.. 

ரயில்வே கலாசி பணிக்கு முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என் கண்களில் ரத்தக் கண்ணீர் வருகிறது. 45 ஆண்டுகளாக இல்லாத வேலை வாய்ப்பு பற்றாக்குறை பாஜவினால் ஏற்பட்டுள்ளது. 
வேலை வாய்ப்பு தான் காங்கிரசின் முதல் அத்தியாயம்..

மத்திய அரசில் 4 லட்சம், மாநிலத்தில் 20 லட்சம் வேலை காலியாக உள்ளது. இதனை 9 மாதங்களில் நாங்கள் நிரப்புவோம்..
இந்தியாவில் அதிக மருத்துவக்கல்லூரிகள் தேவை.. மொத்த உற்பத்தியில் 3% மருத்துவத்துறைக்கு ஒதுக்குவோம்.
கிருஷ்து பிறந்ததிலிருந்து 900 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி தமிழ் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற நிலையை காங்கிரஸ் உருவாக்கியது. இந்த ஐந்து ஆண்டுகளில் யாருக்கும் கல்விக்கடன் கிடைக்கவில்லை..
பாஜக மேட்டுக்குடி கட்சி.. மற்றவர்கள் எல்லாம் குழத்தொழில்தான் செய்ய வேண்டும் என்கிறார் யோகி ஆதியநாத். இந்த நிலை மாற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள். டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் மாநிலத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மாற்றம் எற்படும்...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.