தேசிய அளவிலான சதுரங்க விளையாட்டில் சென்னை முகப்பேர் கிழக்கு, வேலம்மாள் நிறைநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் நிகல் மகிழணன் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஹர்ஷ்வர்தன் முறையே (14 வயதிற்குட்பட்ட), (17 வயதிற்குட்பட்ட) பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி பூர்ணா ஸ்ரீ. எஸ்ஜிஎஃப்ஐ நடத்திய 2018-19ஆம் ஆண்டுக்கான செஸ் சாம்பியன்ஷிப் (17 வயதிற்குட்பட்ட) பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மாணவர்களின் தேசிய அளவிலான சாதனையை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய், மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி ஊரக கைத்தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின், தமிழ் அலுவலக மொழி மற்றும் தமிழ் கலாசார அமைச்சர் கே. பாண்டியராஜன் ஆகியோர் கவுரவித்துள்ளனர்.