சென்னை மாநிலக் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 27) சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்திடம் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, மாநிலக் கல்லூரி கிரிக்கெட் மைதானத்திலிருந்து, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை காவல் இருசக்கர வாகனங்கள் மற்றும் மிதிவண்டிகளின் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஜூன் 19ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் 75 நகரங்களை கடந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட்; 45 நாடுகளில் இருந்து சென்னை வந்தடைந்த 553 வீரர்கள்