ETV Bharat / state

44ஆவது செஸ் ஒலிம்பியாட் - இந்திய மகளிர் அணிகள் அபாரம் - செஸ்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் , மூன்று இந்திய மகளிர் அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

CHESS OLYMPIAD WOMENS WIN
CHESS OLYMPIAD WOMENS WIN
author img

By

Published : Jul 29, 2022, 10:00 PM IST

சென்னை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் மூன்று இந்திய மகளிர் அணிகள் இன்று களம் கண்டன. இந்தியா ஏ அணி தஜகஸ்தானையும் , இந்தியா பி அணி வேல்ஸுடனும் , இந்தியா சி அணி ஹாங் காங்குடனும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் இந்தியா ஏ அணியில் கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி 41ஆவது நகர்த்தலில் அண்டோனோவா நடேஷ்டாவை வீழ்த்தினார். அதே பிரிவில் வைஷாலி அப்ரோரோவா சப்ரினாவையும் , தனியா சச்தேவ் சைடோவா ருக்ஷோனாவையும் , குல்கர்னி பக்தி ஹோதாமி முத்ரிபாவையும் வீழ்த்தினர்.

அதே நேரத்தில் இந்தியா பி அணி வேல்ஸ் அணியை எதிர்கொண்டது; இதில் வந்திகா அகர்வால் 43ஆவது நகர்த்தலில் ஸ்மித் ஒலிவியாவையும், சவுமியா சுவாமிநாதன் 37ஆவது நகர்த்தலில் சோங் கிம்பர்லியையும் , கோம்ஸ் மேரி 29ஆவது நகர்த்தலில் ரே ஹியாவையும் , திவ்யா தேஷ்முக் 34ஆவது நகர்த்தலில் பக்கா குஷியையும் வீழ்த்தினர்.

ஹாங் காங்குடன் மோதிய இந்தியா சி அணியில் ஈஷா 49ஆவது நகர்த்தலில் கண்ணப்பன் சிகப்பியையும் , நந்திதா 29ஆவது நகர்த்தலில் டெங் ஜிங் ஜின் கிரிஸ்டலையும் , வர்ஷினி 37ஆவது நகர்த்தலில் லி ஜாய் சிங்கையும் , பிரத்யூஷா 32ஆவது நகர்த்தலில் லாம் கா யானையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டி: கிரிக்கெட்டில் இந்தியா சொதப்பல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.