ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகளின் தொடர் வெற்றி: பயிற்சியாளரின் பிரத்யேக பேட்டி! - Continual win in Chess Olympiad

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தொடர் வெற்றியை பெற்று வரும் நிலையில், இந்திய ‘பி’ பிரிவின் பயிற்சியாளர் ரமேஷ் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதனை காணலாம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகளின் தொடர் வெற்றி: பயிற்சியாளரின் பிரத்யேக பேட்டி!

author img

By

Published : Aug 1, 2022, 10:37 AM IST

சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் மூன்று அணிகள் ஓபன் பிரிவுகளிலும், மூன்று அணிகள் மகளிர் பிரிவுகளிலும் பங்கற்றுள்ளனர். ‘பி’ அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், சாரின் மற்றும் ரனவுக் ஆகிய இளம் வீரர்கள் களம் கண்டு வருகின்றனர்.

இவர்கள் 12 ஆட்டம் விளையாடி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்று, இந்திய அணியை போட்டி பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்திய அணியின் தொடர் வெற்றி தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு இந்திய ‘பி’ பிரிவின் பயிற்சியாளர் ரமேஷ் பிரதேயக பேட்டியளித்துள்ளார்.

இந்தியா ‘பி’ பிரிவு தொடர் வெற்றி பெற்று வருகிறது - இதை எப்படி உணர்கிறீர்கள்?

தொடர்ந்து வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் 12-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா - வின் ஆட்டம் சற்று கடினமாக இருந்தது. அவ்வாறு இருந்தபோதிலும் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகளின் தொடர் வெற்றி: பயிற்சியாளரின் பிரத்யேக பேட்டி!

இந்தியா ‘பி’ பிரிவு புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது. இது அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தை விளையாட்டு வீரர்கள் இடையே ஏற்படுத்துமா?

தற்போது இந்தியா இரண்டாவது அணி போட்டியில் முதலிடத்தில் உள்ளது. இது பெரிய அளவில் அழுத்தத்தை விளையாட்டு வீரர்களுக்கு தராது. ஏனென்றால், அடுத்தடுத்த ஆட்டங்களில் அவர்கள் கவனம் செலுத்துவதால் புள்ளி பட்டியலில் அவர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள்.

இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதால், எங்கள் அணியின் மேல் எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இது எங்களுக்கு ஊக்கத்தை அளிக்குமே தவிர, வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தை தராது. நிச்சயம் அவர்கள் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றி பதக்கம் வெல்வோம்.

சீனா மற்றும் ரஷ்யா போட்டியில் பங்கேற்காதது இந்தியாவிற்கு சாதகமாக இருக்குமா?

சீனா மற்றும் ரஷ்யா போட்டியில் கலந்து கொள்ளாதது அனைத்திற்கும் சாதகமாக இருக்கும்.

ஒரு போட்டி முடிந்த பிறகு வீரர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

போட்டி முடிந்து விடுதிக்கு சென்றவுடன் உடற்பயிற்சி செய்ய சொல்லி இருக்கிறேன். ஏனென்றால், அன்று நடந்த போட்டியை பற்றி மறப்பதற்காக, இதை செய்ய சொல்லி இருக்கிறேன். அது மட்டுமில்லாமல் தூங்க வேண்டும். சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்து வரும் ஆட்டங்களில் சரியாக விளையாட முடியாது.

இரவு உணவு முடித்த பிறகு, அணியுடன் ஆலோசனை செய்த பிறகு தூங்கச் சென்று விடுவோம். காலை எழுந்தவுடன் யாருடன் போட்டியில் கலந்து கொள்வோம் என்பதை பார்த்துவிட்டு அதற்கு ஏற்ற மாதிரி திட்டமிடுவோம்.

விஸ்வநாதன் ஆனந்த் அணியின் ஆலோசகரா இருப்பது அணிக்கு உதவியாக இருக்கிறதா?

நேற்றிரவு விஸ்வநாதன் ஆனந்தை எங்கள் அணி ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்தேன். அவர் வந்து ஆலோசனை வழங்கியது எங்களுக்கு உதவியாக இருந்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிறகு மக்களிடையே செஸ் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?

தற்போது இளம் வீரர்கள் இந்தியா ‘பி’ பிரிவில் உள்ளனர். வருங்காலத்தில் இவர்கள் இளமையாக இருக்க மாட்டார்கள். எனவே இளம் வீரர்கள் வந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கான துரித பணிகளை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: 3 வது சுற்றிலும் இந்திய அணிகளின் தொடர் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.