ETV Bharat / state

மு.க. ஸ்டாலின், டிவோர்கோச் ஆர்கடி சந்திப்பு..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோச் ஆர்கடி சந்தித்துப் பேசினார்.

chess olympiad fide president arkady dvorkovich  arkady dvorkovich meets cm stalin  arkady dvorkovich  tamil nadu cm stalin  சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர்  டிவோர்கோச் ஆர்கடி  ஸ்டாலினை சந்தித்த டிவோர்கோச் ஆர்கடி
தமிழ்நாடு முதலமைச்சருடன் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சந்திப்பு
author img

By

Published : Apr 2, 2022, 6:41 AM IST

Updated : Apr 2, 2022, 10:40 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, நேற்று (ஏப். 1) டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், சர்வதேச சதுரங்கப் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோச் ஆர்கடி சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள 44ஆவது சர்வதேச சதுரங்க போட்டி குறித்து கலந்துரையாற்றினார்.

44ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான பெருமை வாய்ந்த இடமாக சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், உலகமே கொண்டாடும் வகையிலான இந்நிகழ்வினை சிறப்பானதாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும், அதற்கான பணிகளை விரைந்து முடித்திடவும் ஏதுவாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

உலகெங்கிலும் 186 நாடுகளிலிருந்து பல பிரபலமான கிராண்ட் மாஸ்டர்ஸ் உட்பட சுமார் 2,000 சதுரங்க வீரர்கள் சென்னையில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சதுரங்க ஒலிம்பியாட் குழு (CCOC) ஒன்றினை இதற்கென உருவாக்குவதற்கு உரிய அரசாணையை வெளியிடுவதற்கான பணிகளும், இப்போட்டியை வண்ணமயமான தொடக்க விழா மற்றும் கண்கவர் நிறைவு விழாக்களுடன் நடத்துவதற்குத் தேவையான பல்வேறு தொடக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய கலாச்சார, நாட்டுப்புறக் கலை வல்லுநர்கள் இவ்விழாக்களில் தங்களது பங்களிப்பினை வழங்கி, இந்நிகழ்ச்சியினை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றவிருக்கிறார்கள். 44ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவதன் வாயிலாக, நமது மாநிலத்தின் பண்பாடு, பாரம்பரியம், விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் பல சிறப்பம்சங்கள் உலக அளவில் பேசுபொருளாக விளங்கும். சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) தலைவராக 2018 முதல், கடந்த 4 ஆண்டுகளாக பொறுப்பு வகித்துவரும் டிவோர்கோச் ஆர்கடி, இந்தியாவில், குறிப்பாக சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து, தனது மகிழ்ச்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

அப்போது, இப்போட்டி சிறப்புடன் நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியளித்தார். இந்தக் கலந்துரையாடலின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் இரா. ஆனந்தகுமார், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் காரை இன்றளவும் பராமரித்து வரும் அதிமுக நிர்வாகி!

Last Updated : Apr 2, 2022, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.