சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தில் வசித்துவருபவர் கருணாகரன் (23). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்துவிட்டு ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் ஏசி பழுது பார்க்க கிழக்கு தாம்பரம் ப்ரொபசர் காலனியில் உள்ள செல்வம் என்பவர் வீட்டுக்கு சென்ற இடத்தில் 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது காதல், மாணவியின் பெற்றோர்களுக்கு தெரிய வர காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரும் மாணவியின் இல்லத்தில் திருமணம் செய்துகொண்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து மாணவியை காணவில்லை என அவரின் பெற்றோர்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்தப் புகாரின் பேரில் சேலையூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இதையடுத்து, இருவரும் திருப்பதியில் இருப்பதை கண்டுபிடித்த காவல் துறையினர் திருப்பதிக்கு நேரில் சென்று அவர்களை அங்கிருந்து அழைத்து வந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொண்ட கருணாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வெம்பக்கோட்டை வெடி விபத்து - இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு