ETV Bharat / state

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

author img

By

Published : Nov 30, 2019, 1:52 PM IST

Updated : Nov 30, 2019, 2:23 PM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

metrology
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கனமழை தீவிரமாகப் பெய்து வருகின்ற நிலையில்ல் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்," குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். குறிப்பாக இன்று கடலூர் மாவட்டம் அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான முதல் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 16 செ.மீ மழையும், புதுக்கோட்டையில் 14 செ.மீ மழையும், திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சூறாவளி காற்று நாற்பதிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் வரை வீசும் காரணத்தினால், மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடல் மற்றும் மாலத் தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 35 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயத்தை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்...

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 30.11.19

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், இன்று கடலூர் மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை 8 மாவட்டங்களில் கன மழையும் பதிவாகி உள்ளது. குறிப்பாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பதினாறு செண்டிமீட்டர் மழையும், புதுக்கோட்டையில் 14 சென்டி மீட்டர் மழையும், திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பதிமூன்று சென்ற மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை: சூறாவளி காற்று நாற்பதில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடல் மற்றும் மாலத் தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்..

tn_che_01_metrology_press_meet_by_puviyarasan_script_7204894Conclusion:
Last Updated : Nov 30, 2019, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.