இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் 30 முதல் 40 கிலோ மீட்டர் வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தொடர்ந்து தெற்கு அந்தமான், அதனையொட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிமீ முதல் 55 கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸும் இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சந்தேகத்திற்கிடமான காய்ச்சலுக்கு பெண் சாவு: நீலகிரியில் வீடு வீடாக ஆய்வு