இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 1.2.2020 முதல் 120 நாள்களுக்கு 7776 மி.கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும்.
தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதுபோல வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து 6.6.2020 முதல் 15.6.2020 முடிய 10 நாள்களில் 7 நாள்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்தும், 3 நாள்கள் இடைநிறுத்தம் செய்தும், 241.92 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டடங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு!