சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் ஹரிசாந்தி. அதே கல்லூரியில் தற்போது தெலுங்கு துறை தலைவராகப் பணிபுரிந்துவருபவர் நடராஜன்.
இவர்கள் இருவரும் 2011-2015ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை அக்கல்லூரியில் இருவரும் ஒன்றாகப் பணிபுரிந்துள்ளனர். அதன்பின், அரசுப் பணி கிடைத்து பெரம்பூர் அரசுப்பள்ளி ஆசிரியராக ஹரிசாந்தி பணி செய்துவந்துள்ளார். அவ்வப்போது அவர் கல்லூரிக்குச் சென்று நடராஜனை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு நடராஜனுக்கு அவரது அக்கா மகளுடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருப்பினும் இருவரது காதல் மறைமுகமாக நடைபெற்றுவந்த நிலையில் ஹரிசாந்தி தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்திவந்துள்ளார்.
இதற்கு நடராஜன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த ஹரிசாந்தி கையை அறுத்துக்கொண்டு அக்கல்லூரி வகுப்பறையில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்துவந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நடராஜன் ஹரிசாந்தியை காதலித்து ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து நடராஜனை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:
உன்னாவ் வழக்கு: குற்றவாளிகளுக்கு 12 மணி நேரம் நீதிமன்றக்காவல்!