சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்துவருபவர் கிஷோர் (50). இவர் சென்னை ஆவடியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகின்றார்.
இவர் வழக்கம்போல் நேற்று காலை பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த பிறகு படுக்கை அறைக்குச் சென்று பல மணி நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார்.
இதன்பிறகும் கதவை கிஷோர் திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மின்விசிறியில் கிஷோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
![police man commits suicide after returning from work](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7813246_thumbn.jpg)
இதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்துசென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ 044 -2464000 இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க...மதுரையில் கரோனா பாதித்த முதியவர் தற்கொலை முயற்சி!