ETV Bharat / state

'ரயில் டே' கொண்டாடிய கல்லூரி மாணவர்களிடம் விசாரணை!

சென்னை: கடற்கரை மின்சார ரயிலில் 'ரயில் டே' கொண்டாடி பயணிகளுக்கு இடையூறு செய்த ஆறு மாணவர்களை ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

சென்னை ரயில் டே கொண்டாட்டம் ரயில் டே கொண்டாட்டம் ரயில் டே Train Day Celebration Chennai Train Day Celebration Train Day Rail Day Chennai Rail Day
Train Day Celebration
author img

By

Published : Mar 15, 2020, 7:45 PM IST

சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் 'பஸ் டே' என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்துவதும், ரயில்களில் 'ரயில் டே' என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். மாணவர்களின் இந்த நடவடிக்கை மற்ற பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரயில், பேருந்துகளில் கொண்டாடங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயிலில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், மின்சார ரயிலுக்கு அலங்காரம் செய்து 'ரயில் டே' கொண்டாடி உள்ளனர்.

பாட்டு பாடியும், தாளம் போட்டும், ஆட்டம் போட்டதால் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் ‘ரயில் டே’ கொண்டாடிய ஆறு மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பின்னர், இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறி, இனி இதுபோன்று பொதுமக்கள், பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்விதமாக நடந்துகொண்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்து மாணவர்களை சிறிது நேரத்தில் விடுவித்தனர்.

இதையும் படிங்க:விரைவில் வடநாட்டு ரயில் நிலையத்தில் ஒலிக்கவிருக்கும் தமிழ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.