சென்னை: பெருநகர போக்குவரத்து காவல் துறை பல்வேறு வாகனங்களுக்கான வேக வரம்புகள் நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திகுறிப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, "சென்னையில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகள் வேக வரம்பை கடைபிடிப்பது முக்கியமான ஒன்று. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
-
Speed limit in Chennai City limits
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
From 04.11.2023
Light Motor Vehicles : 60 Kmph 🚘🚙🏎️
Heavy Motor Vehicles: 50 Kmph 🚍🚛
Two Wheelers: 50 Kmph 🏍️🛵
Auto-rickshaws: 40 Kmph 🛺🛺🛺
All vehicle types in residential area: 30 Kmph#Chennai #Traffic #SafetyFirst @R_Sudhakar_Ips pic.twitter.com/5SH2x2uerB
">Speed limit in Chennai City limits
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 1, 2023
From 04.11.2023
Light Motor Vehicles : 60 Kmph 🚘🚙🏎️
Heavy Motor Vehicles: 50 Kmph 🚍🚛
Two Wheelers: 50 Kmph 🏍️🛵
Auto-rickshaws: 40 Kmph 🛺🛺🛺
All vehicle types in residential area: 30 Kmph#Chennai #Traffic #SafetyFirst @R_Sudhakar_Ips pic.twitter.com/5SH2x2uerBSpeed limit in Chennai City limits
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 1, 2023
From 04.11.2023
Light Motor Vehicles : 60 Kmph 🚘🚙🏎️
Heavy Motor Vehicles: 50 Kmph 🚍🚛
Two Wheelers: 50 Kmph 🏍️🛵
Auto-rickshaws: 40 Kmph 🛺🛺🛺
All vehicle types in residential area: 30 Kmph#Chennai #Traffic #SafetyFirst @R_Sudhakar_Ips pic.twitter.com/5SH2x2uerB
இந்த நிலையில் சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக விதிமீறலில் ஈடுபடுபவர்களால் மற்ற சாலைப் பயணிகளையும் பாதிப்படைய செய்யும் என்பதால், வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று" என போக்குவரத்து காவல்துறையினர் தெறிவித்துள்ளனர்.
மேலும், "முன்னதாக 2003 ஆம் ஆண்டில் பல்வேறு வாகனங்களுக்கான வேக வரம்புகளை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் நிர்ணயிக்கப்பட்டது, அதில் காலை 7மணி முதல் 10 மணி வரை ஆட்டோ 25 கி.மீ, கனரக வாகனங்கள் 35 கி.மீ,
இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர 40 கி.மீ எனவும், கனரக வாகனங்கள் 40 கிமீ, இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ என வேக கட்டுபாடு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதால், சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து, வேக வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அமைத்து இருந்தனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, புது தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வேக வரம்பு மற்றும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் அதன் காரணிகளை ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.
மேலும், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஆர்டிஇ-யை சேர்ந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களுடன் போக்குவரத்து அமைப்பு மற்றும் சாலை வடிவமைப்பைப் பொறுத்து, வாகனங்களின் வேக வரம்பு நிர்ணயம் குறித்து விவாதிக்கப்பட்டன. அதனையடுத்து சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்புகள் குறித்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் தலைமையிலான குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும், இலகு ரக வாகனங்கள் அதிக பட்சமாக 60 கி.மீ வேகத்திலும், இரு சக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும், ஆட்டோக்கள் பகல் நேரத்தில் 40 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெருநகர குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்கள் அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் தான் பயணிக்க வேண்டும்" என்று போக்குவரத்து காவல் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தமிழக அரசால் ஒப்புதல் செய்யப்பட்ட இந்த புதிய வாகன வேக வரம்பு நிர்ணயம், இம்மாதம் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை பெருநகர் போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை புறநகர் ரயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்