சென்னை மயிலாப்பூர் துணை ஆணையருக்கு இன்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் எஸ்பி ஒருவர், மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர மேலும் நான்கு காவலர்கள் என மொத்தம் ஒன்பது காவலர்கள் இன்று ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் கரோனாவால் பாதிப்படைந்த காவலர்களின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 140 பேர் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளனர்.
சென்னையில் இன்று ஒரேநாளில் 1,072 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 18 ஆயிரத்து 693 பேர் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'சமூகப் பரவலை நோக்கி தமிழ்நாடு செல்கிறது' - இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர்