தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அதிகரித்துவரும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக மதுரையில் அதிகரித்துவரும் தொற்றின் காரணமாக ஜூன் 24 தொடங்கி 30ஆம் தேதிவரை ஏழு நாள்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 23) முதல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக விமான நிறுவனங்கள் சார்பாக வெளியாகியுள்ள தகவலில், சென்னையிலிருந்து மதுரை செல்லும் நான்கு விமானங்கள் இன்றுமுதல் (ஜூன் 23) ரத்து செய்யப்படுவதாகவும், அதேபோல தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் ரத்துசெய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...250 வகையான அரிய விதைகளை பாதுகாக்கும் மகாராஷ்டிர மாணவி