கரோனா பொது முடக்கத் தளர்வுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நவராத்திரி, தீபாவளி, துர்கா பூஜை, , வடமாநில விவசாய திருவிழாக்கள் என்று அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வரவுள்ளன. இதனால் மக்களின் பொது போக்குவரத்து தேவை அதிகரிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏராளமான கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை(அக்21) முதல் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கே.எஸ். ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் சிறப்பு டபுள் டக்கர் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை 8 குளிர்சாகனப் பெட்டிகளுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7:25 மணிக்குப் புறப்பட்டு, பெங்களூருவுக்கு நண்பகல் 1.10 மணிக்குச் சென்றடைகிறது. பின் மீண்டும் அங்கிருந்து மதியம் 2.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.30 சென்னை வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சேலம், தர்மபுரி வழித்தடங்களில் தீபாவளி சிறப்பு ரயில்கள்!