தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது குறித்து மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் மூவரும் முறைகேடு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (30), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (34), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் (33) ஆகிய மூன்று பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சீனிவாசன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு மேலும் நான்கு பேரிடம் தலா ஐந்து லட்சம் ரூபாய் பெற்று தேர்வு முறைகேடாக எழுத உதவி புரிந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: