ETV Bharat / state

மீண்டும் தொடங்க உள்ள சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி - தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (NH 205) விரிவாக்கப்பணி எட்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், நிலம் கையகப்படுத்துதல், பொது மக்களின் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.

highway
highway
author img

By

Published : Mar 21, 2021, 10:39 AM IST

Updated : Mar 21, 2021, 9:37 PM IST

சென்னை: கடந்த 2013ஆம் ஆண்டு, 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்காக மத்திய-மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முழு மூச்சாக பணியில் இறங்கினர். எனினும் நிலம் கையகப்படுத்துதல், பொது மக்களின் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.

இந்தத் திட்டத்தின்படி தற்போதுள்ள நான்கு வழி சாலையை ஆறு வழி சாலையாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாது சென்னை, பாடியில் தொடங்கும் இந்தச் சாலையானது, அம்பத்தூர் வழியாக திருப்பதி நகரப்பகுதிக்கு முன்னரே முடிவடைகிறது. பாடியிலிருந்து சாலை விரிவாக்கப்பணி தொடங்குவதால், மாநில நெடுஞ்சாலைத் துறை 24 கிமீ தூரத்திற்கு இப்பணியை மேற்கொள்ள உள்ளது.

இந்தத் திட்டத்தை 2009ஆம் ஆண்டு அப்போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு கொண்டுவந்தார். ஆனால் பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள வியாபாரிகள், குடியிருப்போர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து இத்திட்டத்தை நெடுஞ்சாலைத் துறை கையில் எடுத்தது. எனினும் திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தத் திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலை இயக்குநர் (சென்னை) தனகுமார் தொலைபேசி வாயிலாக கூறுகையில், "நிலம் கையகப்படுத்துவது முதல் டெண்டர் ஒப்பந்தம் கொடுக்கும் வரை இத்திட்டத்தில் பிரச்சினைகள் உள்ளன. எனினும் நெடுஞ்சாலைத் துறை ஏறக்குறைய எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது” என்றார்.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை (மெட்ரோ பிரிவு) அலுவலர் ஒருவர் கூறுகையில், ”மாநில நெடுஞ்சாலைத் துறையும் பாடி முதல் திருநின்றவூர் வரை 24கி.மீ தூரம் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக முயற்சி எடுத்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் இப்பகுதிகளில் அதிகமாக உள்ளது என்பதை அறிவோம். இந்தத் திட்டத்தை பொறுத்தவரை நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து விட்டது. எனவே விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும்.

நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும்போது மக்கள் மற்றும் வணிகர்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால், இந்தப் பணி கைவிடப்பட்டது. எனினும், எதிர்ப்பாளர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, நிலங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

Last Updated : Mar 21, 2021, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.