சென்னை வளசரவாக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. சில வாரங்களுக்கு முன்பு வளசரவாக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகைகளை, அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் பறித்துச் சென்றார்.
இதுகுறித்து வளசரவாக்கம் உதவி ஆணையர் மகிமை வீரன், வளசரவாக்கம் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொளப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கவாஸ்கர் (என்ற) குரு (35) என்பவரைக் கைது செய்து விசாரணை செய்ததில், செயின் பறிப்பில் ஈடுபட்டது அவர் தான் என்பது தெரிய வந்தது.
உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருடுபோன மாரியம்மன் சிலை மீட்பு - ஒருவர் கைது!