ETV Bharat / state

அக்கா வீட்டில் 10 சவரன் நகைகளை திருடிய தம்பி : கைது செய்த காவல் துறையினர்! - சென்னை திருட்டு வழக்கு

சென்னை : திருமுல்லைவாயலில் தனது அக்கா வீட்டிற்கு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்று, 10 சவரன் நகைகளைத் திருடிய நபரைக் காவல் துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

home_gold_theft_brother_arrest_
home_gold_theft_brother_arrest_
author img

By

Published : Nov 2, 2020, 1:16 AM IST

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சாகுல் அமீது (வயது 38). இவரது மனைவி நிஷா (வயது 32). கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நிஷா வீட்டிற்கு, அவரது தம்பி முறையான தமிம் அன்சாரி (வயது 30) என்பவர், குடும்பத்துடன் சென்றுள்ளார்.

பின்னர், இரு குடும்பத்தினரும் அதே பகுதியில் உள்ள தங்களது உறவினர் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து நிஷா வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து நிஷா திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், நிஷாவின் தம்பி தமீம் அன்சாரி நகைகளைத் திருடியது தெரிய வந்தது. இந்நிலையில், தான் கடன் நெருக்கடியால் அவதிப்பட்டதாகவும், எனவேதான் தனது அக்கா நிஷா வீட்டில் நகைகளைத் திருடியதாகவும் தமீம் ஒப்புக் கொண்டார். மேலும், திருடிய நகைகளை தி.நகரில் உள்ள பிரபல ஜுவல்லரிக் கடையில் விற்று பணம் பெற்று கடனை அடைத்தாதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காவல் துறையினர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜுவல்லரி கடைக்குச் சென்று 10 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தமீம் அன்சாரியை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சுடுகாட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது - 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.