சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் சக்திவேல் (25), இவருடன் லோடு ஏற்றும் உதவி ஆட்களான வல்லரசு, கணேஷ் ஆகிய மூன்று பேரும் அப்பகுதியில் இருந்து மினி லாரியில் சோப்புகளை ஏற்றிக்கொண்டு மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக தாம்பரம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது, தாம்பரம் அருகே மினி லாரியின் டயர் திடீரென வெடித்ததில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மூவரும் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனைக் கண்ட புறவழிச்சாலை வழியாக வந்த வாகன ஓட்டிகள் குரோம்பேட்டை போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடனடியாக புறவழிச் சாலையில் தடுப்புகள் அமைத்து அவ்வழியாக வந்த போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் கிரேன் மூலம் லாரியினை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
இதையும் படிங்க: லாரி மோதி விவசாயி பலி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!