ETV Bharat / state

10ஆம் வகுப்பு ரிசல்ட்டுக்கு பயம்; தற்கொலைக்கு முயன்ற மாணவி தேர்ச்சி! - 271 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற மாணவி 10ஆம் வகுப்பில் 271 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 19, 2023, 6:18 PM IST

சென்னை: 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தோல்வி அடைந்து விடுவோம்' என நினைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி தேர்வில் வெற்றி அடைந்துள்ளார். சென்னை அயனாவரம், பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவு வரவிருந்த நிலையில் தான் தோல்வி அடைந்து விடுவோம் என நினைத்த மாணவி பயத்தில் வீட்டில் இருந்த ஆல் அவுட் (ALL Out) என்ற கொசு விரட்டி திரவத்தை எடுத்து குடித்துவிட்டார். இதனை அறிந்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக, அவரை அருகிலுள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையினால், அவர் தற்போது நலமாக உள்ளார்.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்: மாணவிகளை முதல்வர் இருக்கையில் அமர வைத்த பள்ளி நிர்வாகம்!

இந்த நிலையில், இவ்வாறு பொதுத் தேர்வு முடிவுகளுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற மாணவி,இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 271 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்த அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்வு என்பது வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர அதுவே வாழ்க்கை அல்ல என கல்வியாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். பாஸானாலும் சரி பெயிலானாலும் சரி அதனை எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தற்கொலை எதற்கு தீர்வல்ல.. மறவாதீர்கள்
தற்கொலை எதற்கு தீர்வல்ல.. மறவாதீர்கள்

இதையும் படிங்க: தந்தையை இழந்த போதும் தன்னம்பிக்கையோடு படித்த நெல்லை மாணவன் - 10ஆம் வகுப்பில் 495 மார்க் எடுத்து சாதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.