ETV Bharat / state

அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடித்து தரைமட்டம்! - chennai sengundram building demolition

சென்னை: செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலர்கள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து தரைமட்டமாக்கினர்.

chennai
author img

By

Published : Nov 14, 2019, 7:15 PM IST

சென்னை செங்குன்றம் ஜிஎன்டி ரோடு பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான 12,000 சதுர அடியில் வணிக வளாகம் 2004ஆம் ஆண்டு கட்டப்பட்டு இயங்கிவந்தது.

இந்நிலையில் இந்தக் கட்டிடம் முறையான ஆவணங்கள் இன்றி இயங்கியதாகவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி சென்னை சிஎம்டிஏ அலுவலர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

2018ஆம் ஆண்டு இந்தக் கட்டிடத்தை இடித்து அகற்ற சிஎம்டிஏ அலுவலர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் இந்தத் தீர்ப்பை மதிக்காமல் மீண்டும் அந்ந கட்டிடத்தில் வணிக வளாகம் இயங்கிவந்தது. இதனால் கடந்த ஆண்டு இந்த கட்டிடத்திற்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இடித்து தள்ளப்படும் வணிக வளாக கட்டிடம்

இந்நிலையில், இன்று காலை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிஎம்டிஏ அலுவலர்கள் மற்றும் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய்த் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், முன்னிலையில் ராட்சத இயந்திரம் மூலம் கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அந்த பகுதியில் இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: "அலுவலக கட்டடத்தை நீங்க சரி செய்றீங்களா, நான் செஞ்சிக்கவா" - காட்டமான திமுக எம்எல்ஏ!

Intro:செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் நீதிமன்ற உத்திரவுப்படி இடித்தனர்Body:செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் நீதிமன்ற உத்திரவுப்படி இடித்தனர்.

சென்னை செங்குன்றம் ஜி என் டி ரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான 12.000 சதுர அடியில் வணிக வளாகம் கடந்த 2004 ல் கட்டப்பட்டு இயங்கிவந்தது.

இந்நிலையில் இதற்கு முறையான ஆவணங்கள் இன்றியும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால் இதுபற்றி சென்னை சிஎம்டிஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது.

இந்த நிலையில் மீண்டும் தீர்ப்பை மதிக்காமல் வணிக வளாக கட்டிடம் இயங்கி வந்தது .இதனால் கடந்த ஆண்டு இந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் வருவாய் துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் துப்புரவு ஆய்வாளர்கள் முன்னிலையில் ராட்சத இயந்திர மூலம் கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.